Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Untitled Document
தவறாது செய்யத்தக்கன – தவிர்க்கப்பட வேண்டியன

தவறாது செய்க:
  • இணையவழியில் விண்ணப்பத்தினைப் பதிவிடும் முன் தளத்தில் காணலாகும் விவரங்கள், நெறிகாட்டுதல், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பம் பதிவிடும் முறை ஆகியனவற்றைப் படித்தறிந்து கொள்க.
  • தேவைப்படின் வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைக் கையால் எழுதிச் சரி பார்த்துக் கொள்ளுதல் நலம்.
  • பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள், ஆண்டு விற்றுமுதல் அறிக்கை, பன்ன்னாட்டுத் தரச் சான்றிதழ்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல்கள் போன்றவை jpeg கோப்பு வடிவில் 50 kb நினைவக அளவுக்குட்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்க.
  • விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பின், பதிவிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஒப்புகையினைப் பதிவிறக்கம் செய்து பின் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
தவிர்த்திடுக:
  • இடைத்தரகர் / செல்வாக்குடையோர் எனச் சொல்லிக் கொள்வோர் என எவரையும் நம்பி ஏமாறுதல் வேண்டாம்.
  • விவரம், பதிவிடுதல் மற்றும் செயலாக்கம் குறித்த எவ்வித அய்யப்பாடு, தெளிவுரை, விளக்கம், இடையூறு குறித்து நேரடியாகவோ, தொலைபேசி/அலைபேசி/மின்னஞ்சல்/சமூக ஊடகங்கள் வழி மாவட்டத் தொழில் மையத்தினைத் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம்.
  • விண்ணப்பத்தினைப் பதிவிடும் போது தவறான/ உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவிடவோ, வேண்டுமென்றே சில விவரங்களை மறைத்திடவோ வேண்டாம்.